தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (பிப்.25) முதல் தொடங்கியது. இது தொடர்பாக சென்னையில் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், "இந்த வேலை நிறுத்தத்தை ஓராண்டுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வந்தோம். தற்போது வேறு வழியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 18 மாதங்களாக ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் தான் போராட்டம் நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும். அரசு எங்களை அழைத்து பேச வேண்டும். தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் வெறும் ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கியது எங்களை அவமதிக்கும் செயல்.
பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மூலம் தற்காலிகமாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாள்களுக்கு இதனை தொடர முடியாது. அரசு எங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனக் கோருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அனைத்துப் பேருந்துகளும் இயங்கும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்