சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அனகாபுத்தூர், பம்மல், சிட்லபாக்கம், செம்பாக்கம், முடிச்சூர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளைத் தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அனகாபுத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் பயன் பாட்டிற்காக புதிய தினசரி அங்காடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் ஆறு மாத காலத்தில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் என்னென்ன மரங்கள் நடப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம், தனது கைகளால் மரம் ஒன்றையும் நட்டு வைத்தார். பின்னர் பம்மல் சென்று திருப்பனந்தாள் ஏரியை பார்வையிட்டு, அதனை தூர்வாருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுப் பணியில் தலைமை செயலாளர் இறையன்பு உடன் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, பம்மல் மண்டல குழு தலைவர் வே. கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் மேரிக்கு பொன்னாடை அணிவித்து இறையன்பு வாழ்த்து