ETV Bharat / state

சென்னை கொளத்தூரில் ரூ.3.84 கோடியில் விளையாட்டு திடல்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் - ஸ்ரீ அகஸ்தியர் அறக்கட்டளை

MK Stalin: சென்னையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ 3.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ 3.84 கோடியில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 10:44 PM IST

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 நிதியிலிருந்து 3 கோடியே 30 லட்சம் செலவில், பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுப்பந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டுத் திடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு.வி.க நகர் 8வது தெருவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், நடைபாதை, இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

ஸ்ரீ அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரம், காது கேட்டும் கருவி, தையல் இயந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

37 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மழைநீர் சேகரிக்கும் குளம் அமைத்தல் மற்றும் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் அஞ்சுகம் நகர் 18வது தெருவில் 28 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக துப்புரவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கட்டடம் கட்டும் பணி வெற்றி நகரில் உள்ள தியாகராஜன் தெருவில் 34 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோட்ட அலுவலகக் கட்டடம் கட்டும் பணி என மொத்தம் 5 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 33 புதிய மேம்பாட்டுப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் 60% கட்டணம் உயர்வு.. கண்ணீர் வடிக்கும் பயணிகள்.. கண்டுகொள்ளுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.