ETV Bharat / state

மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு - mk stalin

மதுரை பல்கலைக்கழகப்பேராசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மதுரை பல்கலைகழக பேராசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க முதல்வர் நிதி ஒதுக்கீடு

author img

By

Published : Oct 14, 2022, 4:26 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஊதிய நிலுவை தொடர்பாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 53 கோடியே 20 லட்சம் ரூபாயை உடனடியாக ஒதுக்கி பணபலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். கௌரவ விரிவுரையாளர்கள் சுமார் 4000 பேர் விரைவில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்காக தேர்வு நடத்தப்பட்டு, இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள உயர் கல்வித்துறை இயக்கங்கள் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் அனைவரும் நெட், ஸ்லெட், பிஹெச்டி இவற்றுள் ஏதாவது ஒன்றை நிறைவு செய்து இருக்க வேண்டும்.

இந்தி எதிர்ப்புப்போராட்டம் பெரியார் அண்ணா காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்கிறோம், நாளை திமுக, மாணவரணி இளைஞரணி போராட்டம் நடைபெற உள்ளது.

நாளை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வரலாறு தொடங்கும் என்கிற நிலையை மத்திய அரசு உருவாக்காமல் இருக்கின்ற சூழ்நிலை வளர வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.