ETV Bharat / state

பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு! - Chennai woman murder case life sentence sentenced to life imprisonment

சென்னை: நகை, பணத்திற்காக பெண்ணைக் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chennai woman murder case verdict
Chennai woman murder case verdict
author img

By

Published : Dec 20, 2019, 3:38 AM IST

சென்னை லிங்கப்பன் தெருவில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தவர் கதிஜா. இவருக்கு முகமது அப்பாஸ் என்ற மகன் உள்ளார். கதிஜாவின் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் சயது இப்ராஹிம்.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய மூவரும் கதிஜாவை கொலை செய்து வீட்டில் இருந்த எட்டு சவரன் தங்கநகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்ஃபோன் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, தாய் கதிஜாவின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது மகன் முகமது அப்பாஸ் இதுகுறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சயது இப்ராஹிம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை 7ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி.அனில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை சார்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டதால் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: வாக்காளர்களுக்காக வைத்திருந்த 957 மதுபாட்டில்கள் - இருவர் கைது

Intro:Body:நகை, பணத்திற்காக பெண்மணியை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை லிங்கப்பன் தெருவில் கதிஜா என்ற பெண்மணி தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டில் ஓட்டுநராக சயது இப்ராஹிம் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி கதிஜா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட சயது இப்ராஹிம் அவரது நண்பர் வேலு, பரணிதரன் ஆகிய மூன்று பேரும் வீட்டு உரமையாளரை கொலை செய்து வீட்டில் இருந்த 8 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியற்றை திருடி சென்றனர்.

தன்னுடைய தாய் கதிஜாவின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரின் மகன் முகமது அப்பாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் சயது இப்ராஹிம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த சென்னை 7 வது கூடுதல் அமர்வு நீதிபதி டி.வி.அனில் குமார் குற்றவாளிகள் மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை சார்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுப்பிக்கபட்டுள்ளதால் இந்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.