கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (செப் 7) முதல் மெட்ரோ ரயில், வெளி மாவட்டங்களுக்கு பேருந்து உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
அதே நாளன்று சென்னை புறநகர் ரயில் சேவையும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து பல்வேறு ஊடங்கங்களும் செய்தி வெளியிட்ட நிலையில், இதற்கு தென்னக ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது. தெற்கு ரயில்வே இதுபோன்ற எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் கு.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.