சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த அக்.19 முதல் நேற்று (நவ.4) வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரத்து 125 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70 லட்சத்து 46 ஆயிரத்து 196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42 லட்சத்து 78ஆயிரத்து 808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 லட்சத்து 2 ஆயிரத்து 618 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,009 வழக்குபதிவு செய்யப்பட்டு 67 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமல்!