ETV Bharat / state

பல மாதங்கள் கழித்து மழையைப் பார்த்து மகிழ்ந்த சென்னைவாசிகள்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், பல மாதம் கழித்து சென்னையின் முக்கியப் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை
author img

By

Published : Jun 20, 2019, 6:37 PM IST

கோடைக்காலம் முடிந்தும் குடிநீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில், பருவமழை பொய்த்துபோனதும் குடிநீர் பஞ்சத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல மாதங்களாக சென்னையில் மழை பெய்யாததால் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளும் வற்றின.

சென்னை மழை

இந்நிலையில் இன்று நண்பகல் முதல் சென்னையின் திருவான்மியூர், அடையாறு, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் பூந்தமல்லி பகுதிகளிலும் அரைமணி நேரம் மழை விடாமல் பெய்தது. கிட்டத்தட்ட 196 நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Intro:பல மாதங்களுக்கு பிறகு மழையை பார்த்த பூந்தமல்லி,அரைமணிநேரம் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சிBody:தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.இதற்கு பருவ மழை பொய்த்து போனதும் காரணம். சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் குடிநீர் ஆதாரங்கள் செம்பரம்பாக்கம் ஏரியும் வற்றியுள்ளது இதனால் குடிநீருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:இந்த நிலையில் காலை முதலே கடுமையான வெயில் நிலவி வந்தது வானிலையும் வறண்டு காணப்பட்டது.திடீரென மழை மேகங்கள் தோன்றின பின்னர் பல மாதங்களுக்கு பிறகு இன்று பூந்தமல்லியில் சிறிது தூரல் விழ துவங்கியது.அது பின்னர் சுமார் அரைமணிநேரம் விடாது மழைபெய்தது.இதனால் பூந்தமல்லி பகுதி மக்கள் பல மாதங்களுக்கு பிறகு பெய்த மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.