ETV Bharat / state

முதல் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தை நேபாளத்திற்கு இயக்கும் சென்னை ரயில்வே கோட்டம் - சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை ரயில்வே கோட்டம் முதல்முறையாக நேபாளத்திற்கு ஆட்டோமொபைல் சரக்குகளை இன்று (ஜன. 12) ஏற்றியுள்ளது. ஐ.வி.சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மொத்தம் 125 கார்களை என்.எம். ஜி. ரேக்குகள் மூலமாக வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள நௌதன்வா (நேபாள எல்லை) வரை இயக்குகிறது. இந்த சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு சுமார் ரூ .18.27 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

first automobile freight service to Nepal

author img

By

Published : Jan 12, 2021, 10:47 PM IST

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோமொபைல் சரக்குகளை தொடர்ந்து ஏற்றும் சரக்கு ரயில் பணிமனைகளுள் வாலாஜாபாத் ரயில் பணிமனையும் ஒன்றாகும். வாலாஜாபாத் சரக்கு ரயில் பணிமனையானது, 2016-17ஆம் ஆண்டு முதல் ஆட்டோமொபைல் பொருள்களை ஏற்றுகிறது. இரண்டு லாஜிஸ்டிக் நிறுவனங்கள், அதாவது TCOI, JKTI ஆகிய நிறுவனங்கள் ரயில்வேக்கு (வெளிப்புற, உட்புற போக்குவரத்து இரண்டும்) சரக்கு போக்குவரத்து வணிகத்தை வழங்குகின்றன.

மூன்றாவது புதிய நிறுவனமான M/s IVC லாஜிஸ்டிக்ஸ், சென்னை ரயில்வே கோட்டத்துடன் தற்போது இணைந்து, ஆட்டோமொபைல் சரக்குகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நௌதன்வா ரயில் நிலையம் வழியாக நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆட்டோமொபைல் பொருள்களை சென்னை ரயில்வே கோட்டம் இயக்குவது இதுவே முதல் முறையாகும். நௌதன்வாவிலிருந்து, ஏற்றப்பட்ட கார்கள் நேபாளத்தின் லும்பினி மாவட்டத்தில் உள்ள காத்மாண்டு, மகேந்திர நகருக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.

இந்த சரக்குகள் கிட்டத்தட்ட 2208 கி.மீ., தூரத்திற்கு ரயில் மூலம் கொண்டுச் செல்வதன் மூலம் ரூ. 18.27 லட்சம் வருவாயை ரயில்வே ஈட்டுகிறது. நடப்பு ஆண்டில் சராசரியாக மாதத்திற்கு 2-3 சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ரயில்வே கோட்டத்தின் வாலாஜாபாத் சரக்கு பணிமனையானது சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான், ஹூண்டாய், ஃபோர்டு, டைம்லர் கிறைஸ்லர் போன்ற ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கான ரயில் ஆட்டோ மையமாக செயல்படுகிறது.

ரயில்வே மொபைல் ராம்ப்கள், பணிமனையுடனான அணுகு சாலை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து வாலாஜாபாத் ரயில் நிலையத்திற்கு பொருள்களை எளிதில் கொண்டுவர உதவியுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 450 கார்களை இந்த பணிமனையில் நிறுத்தி வைக்கலாம்.

ரயில்வே என்பது பாதுகாப்பான, நம்பகமான, வேகமான, பொருளாதார ரீதியில் மிகவும் சிக்கனமான போக்குவரத்து முறையாகும். மேலும் பல்வேறு பிரிவுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தனது சிறந்த சேவையை வழங்கிவருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்த ஆட்டோமொபைல் துறையில் ரயில்வே சேவைகளைப் பயன்படுத்தி கடைகோடி பயனாளிகளுக்கு தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த தனியார் நிறுவனங்கள் தற்போது ரயில் போக்குவரத்தின் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... பொங்கல் பண்டிகை 2021: தமிழ்நாட்டில் போக்குவரத்து மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.