சென்னை: மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தி இருந்த நிலையில் நேற்று (டிச.9) இரவு ஆதரவற்ற வீடற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாலையில் தங்கி இருந்துள்ளனர்.
இதில் சேப்பாக்கம் மைதானம் அருகே நடக்க முடியாத மாற்றுத்திறனாளி முதியவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் வேறு எங்கும் செல்ல முடியாமல் நடைமேடை மீது மழையில் நனைந்தபடி படுத்திருந்துள்ளார். திருவல்லிக்கேணி உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையில் நனைந்து கொண்டிருந்த முதியவரை மீட்டு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து காப்பகத்தில் சேர்த்தனர்.
இவ்வாறு மாண்டஸ் புயலின் ஒரு பகுதியாக, கொட்டும் மழையில் நனைந்த படி தவித்த மாற்றுத்திறனாளி முதியவரை, மீட்ட சென்னை போலீசாருக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "கலெக்டர் சார் கொஞ்சம் கருணை காட்டுங்க" - வைரலாகும் சிறுவன் வீடியோ!