ETV Bharat / state

'எந்தெந்த தேதியில எங்கெங்க போனீங்கன்னு நீங்க மறக்கலாம்... ஆனா நான் மறக்க மாட்டேன்' - சொல்வது காவல் துறையின் ஐ ட்ராக்கர் - சென்னை காவல்துறை சார்பாக புதிய செயலி அறிமுகம்

லாக்டவுனில் அத்தியாவசிய பொருள் வாங்க செல்வதாக பொய் கூறி விட்டு வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை லாக் செய்ய, ஐ ட்ராக்கர் என்ற செயலியை சென்னை மாநகரக் காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகமானது ஐ. டிராக்கர் புதிய செயலி
அறிமுகமானது ஐ. டிராக்கர் புதிய செயலி
author img

By

Published : May 11, 2020, 4:29 PM IST

Updated : May 12, 2020, 9:45 AM IST

கரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பெரும் தொற்றாகும். தற்போதுவரை மீள முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றது. இதனை அழிக்க முடியாவிட்டாலும் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடான இந்தியாவில் இதனைக் கட்டுப்படுத்துவதென்பது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு இதுகுறித்து புரிதல் மிகக் குறைவாக இருப்பதே, பல வழிகளில் சட்டத்தை இயற்றினாலும், நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பலர் அதனை ஏற்கின்றனர் சிலர் அதனை ஏற்பதில்லை.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து மாநிலங்களில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த கரோனா தொற்றை கடக்க சிறந்த வழி தகுந்த இடைவெளியை மேற்கொள்வது என்பதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் மக்களில் சிலர் இதனை விடுமுறை நாள் போல் ஊரையே சுற்றிவருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர அரசு தடை விதித்தும் உள்ளனர். ஆனால் இந்த உத்தரவை மீறி பொதுமக்கள் பலர் வாகனங்களில் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் காவல்துறைனர் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்து தண்டனை வழங்கி வருகின்றனர்.

ஆனால் இதனை மீறியும் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி திரிந்து கொண்டே உள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 150 இடங்களில் சோதனை அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் கடந்த 37 நாட்களில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 36 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு சுமார் 24 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குறிப்பாக பொதுமக்களில் பலர் அத்தியாவசிய தேவைகள் என்று காவல் துறையினரிடம் பொய் கூறி விட்டு அடிக்கடி வாகனங்களில் வெளியே சுற்றி வரும் சம்பவமும் அரங்கேறி வருகின்றன. இவர்களை கண்டறிந்து பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் சென்னை காவல்துறையினர் சார்பாக ஐ. டிராக்கர் எனும் செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியை பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலரின் செல்போன்களிலும் பதிவேற்றம் செய்து அவர்களுக்கு பாஸ்வேர்டு மற்றும் பதிவு எண் கொடுத்துள்ளனர்.

மேலும் அத்தியாவசிய தேவைகள் என்று வாகனங்களில் வெளியே வரும் நபர்களின் வண்டி எண், ஆதார் எண், ஓட்டுனர் உரிமம் எண், செல்போன் எண் அல்லது உரிம அட்டைகளில் இருக்கும் QR குறியீட்டை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்துவிட்டால் அவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை செயலியில் பதிவாகும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் செல்வதற்கான காரணம், தற்போதைய இடம் ஆகியவற்றையும் செயலியில் பதிவாகிவிடும்.

இதே போல் அடிக்கடி அத்தியாவசிய தேவைகள் என்று வெளியே சுற்றினால் அந்த செயலியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மூலம் கண்டறிந்து வாகனங்கள் மற்றும் அந்த குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு எளிதாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட நபர் பயணிக்கும் அனைத்து இடங்களும் செயலியில் காண்பிக்கும் படியும் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களின் செயல்பாடுகள் எல்லாம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் படி இந்த செயலி வடிவமக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் பொய் கூறி விட்டு அடிக்கடி வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையிலும், குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் பொதுமக்களின் வாகனங்களை மடக்கி அவர்களது விவரங்களை அருகில் சென்று கேட்கும் சூழ்நிலை இருந்ததாகவும் ஆனால் தற்போது தகுந்த இடைவெளியை பின்பற்றும் வகையில் செயலி இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

வெளியில் அடிக்கடி சுற்றுபவர்களை ட்ராக் செய்யும் ஐ ட்ராக்கர்

இந்த செயலியை ஊரடங்கு முடிந்தவுடனும் காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், சட்டசபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சந்திக்க வரும் பொதுமக்கள் வாகனங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கண்காணிக்கவும் இந்த செயலியை பயன்படுத்தலாம் எனவும், மேலும் முதற்கட்டமாக இந்த செயலியை மயிலாப்பூர் பகுதிகளில் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேலைகளில் மக்கள் தங்களின் தேவைகளை குறைத்துக் கொள்வது சிறந்ததாகும் காரணம் தேவையற்ற சுதந்திரம் சில நேரங்களில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தலைமையாசிரியை

Last Updated : May 12, 2020, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.