சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 4 ஆம் தேதி தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது மூத்த மகன், அதிகவேக சூப்பர் பைக் ஒன்றை ஓட்டக் கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்தனர். இதனையடுத்து, தனுஷின் வீட்டுக்குச் சென்ற போக்குவரத்து போலீசார், அவரது மகனுக்கு ரூ.1000 அபராதம் அபராதம் விதித்தனர். மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மட் அணியாமலும் இரு சக்கர வாகனத்தை இயக்குவது ஆபத்தானது என நடிகர் தனுஷின் மகனுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
இதையும் படிங்க : "சந்தானத்திற்கு ரூ.3 கோடி அல்ல ரூ.30 கோடி கொடுக்க தயார்"- ஞானவேல்ராஜா!