சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் (Metro Rail) சேவையில், டிக்கெட் எடுப்பதற்கு பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடு(QR CODE) முறை உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்-அப் மூலமாகவும் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடஸ்அப் டிக்கெட் வசதி என்பது மெட்ரோ ரயில் சேவை அனைத்து தரப்பு மக்களும் எளிதாகவும், விரைவாகம் அணுகக் கூடியதாக மாறும் என்றும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையமும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை சென்னையில் நாள் ஒன்றிற்கு சுமார் 2 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியால் பயணிகளின் நேர விரையமும் குறையும் என்றும், அதிகளவிலான மக்கள் மெட்ரோ ரயிகளில் பயணிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் 'ஹாய்( Hai)' என்று குறுந்தகவல் அனுப்பினால் 'சார்ட் போட்' என்ற தகவல் வரும்.
அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்து, வாட்ஸ்-அப் மூலமோ, யு.பி.ஐ(UPI) ஆப் மூலமாகவோ பணம் செலுத்தி, டிக்கெட் பெறலாம்.
வாட்ஸ் அப் எண்ணிற்கு வரும் டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவாயில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூ ஆர் குறையீடு ஸ்கேனரில் வழக்கம் போல் காண்பித்து வெளியே செல்லலாம்" என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு