ETV Bharat / state

தசரா, ஆயுதபூஜை தொடர் விடுமுறை.. கூட்டநெரிசலை சமாளிக்க சென்னை மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு! - chennai metro rail extension latest news

Chennai Metro Rail: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையானது இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 6:06 PM IST

சென்னை: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (அக்.19) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தசரா பண்டிகை மற்றும், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு மேலும் வார இறுதி நாட்களுடன் சேர்த்து, 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில், முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அதிக அளவில் இரவு நேரத்தில் பேருந்து, ரயில், விமானம் என்று பயணிகள் செல்வார்கள்.

இதனால் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கபட்டுள்ளது. அதாவது வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் ரயில் சேவையானது நீட்டிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், 8 முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சென்னை சென்டரல் முதல் விமான நிலையம் வரை என இரண்டு வழித்தடங்களிலும், நெரிசல் நேரமான பீக் ஹவர்ஸில் 9, 12 என இரண்டு இடைவெளி நேரத்தில் வழக்காமக ரயில்களானது இயக்கபடும்.

தற்போது, தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனால், பயணிகளின் வசதிக்காக முக்கிய போக்குவரத்து முணையங்களான சென்னை கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம் என இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ளப் பயணிகள், மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் எதற்கு? - அண்ணாமலை சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.