சென்னை: சென்னை மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து காப்பாற்ற உதவும் ஒரு புதுமையான வழிமுறை இயந்திரத்தை ஒருங்கிணைந்த பாதுகாப்பு பயனுள்ள கொள்கை (Combined Security Game Policy Optimization) மூலம் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ட்ரோன்களின் உதவியோடு வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிகளைக் கண்டறியத் தேவையான ஆட்கள் குறைவாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது கிடைக்கும் வளங்களைக் கொண்டு வனவிலங்குகளைப் பாதுகாக்க ஒரு நல்ல உத்தியை வழங்குகிறது. இந்தப் புதிய வகை யுக்தி, அதே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட முந்தையவற்றைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட உத்திகளை வழங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறையானது வள ஒதுக்கீட்டைக் கையாள்வதன் மூலமும், கிடைக்கக்கூடிய வளங்களின் அளவு கண்டறியப்பட்ட பிறகு ரோந்துப் பணி மூலம் செயல்படுகிறது. இந்த ட்ரோன்கள் வனப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை பற்றிய தரவுகளைக் கண்டறிய பயன்படுத்துகிறது மற்றும் பல்வேறு தளங்களில் ரோந்துச் செல்வது குறித்து வேட்டையாடுபவர்களைக் கண்டறியவும் உதவுகிறது.
இத்தகைய ஆராய்ச்சியின் அவசியத்தை எடுத்துக்காட்டி, ஐ.ஐ.டி சென்னை மற்றும் டேடா சயின்ஸ்க்கான ராபர்ட் பாஸ்க் சென்டர் தலைவர் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறுகையில், “பசுமை பாதுகாப்பில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டியது தற்போது அவசியமான ஒன்றாகும்.
மேலும், வனவிலங்கு வேட்டையாடுதல், சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்க இந்த முயற்சி பெரிதும் உதவும்", என தெரிவித்த அவர் இந்த கணிப்புகள் முந்தைய வேட்டையாடுதல் சம்பவங்கள் மற்றும் வேட்டையாடுபவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் அமைந்தவை ஒன்றாகும் எனவும் கூறினார்.
வனவிலங்கு வர்த்தகம் வாழ்விட அழிவுக்குப் பிறகு உயிரினங்களின் உயிர்வாழ்விற்கான இரண்டாவது பெரிய நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. பல அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் வேட்டையாடுதல் சம்பவங்களைத் தடுக்க முயற்சிக்கும் போது, வேட்டையாடுபவர்கள் எப்போதும் ரோந்துக்காரர்களை விட ஒரு படி மேலே இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களின் இந்த கூட்டு ஆராய்ச்சிப் பணி, வேட்டையாடும் சம்பவங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: வரும் கல்வி ஆண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு