ETV Bharat / state

சயான் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம்...!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாட்டில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-high-court-detention-order-quashed-against-sayan
author img

By

Published : Nov 6, 2019, 12:46 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சயான், மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, உதயன், ஜிதின் ஜாய், ஜாம்ஷேர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைசருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இதனால் வழக்கின் திசைமாறி போய்விடும் என்பதால் சயான், மனோஜ் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், மனோஜ் ஆகியோர் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதனையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கேரளா மாநிலம், திருச்சூர் அருகே புதுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவின் உத்தரவின்பேரில், சயான் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

தொடர்ந்து, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சயான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், டீகா ராமன் அமர்வு, போதுமான வழிமுறைகளின்படி குண்டர் சட்டம் பதிவு செய்யப்படாததால், சயான் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள் - சயான் பரபரப்பு குற்றச்சாட்டு

Intro:Body:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாட்டில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரலில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சயன், மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி,உதயன், ஜிதின் ஜாய், ஜாம்ஷேர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கபட்டனர். இந்நிலையில், தமிழக முதல்வருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த விவகாரத்தால் வழக்கின் திசை மாறி போய்விடும் என்று கூறி சயான், மனோஜ் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 8 தேதி அன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சயன்,மனோஜ் ஆகியோர் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதனையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை குழு அமைக்கப்பட்டு கேரளா மாநிலம்,திருச்சூர் அருகே புதுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யாவின் உத்தரவின் பேரில் சயன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சயான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், டீகா ராமன் அமர்வு, போதுமான வழிமுறைகளின் படி குண்டர் சட்டம் பதிவு செய்யப்படாததால் சயான் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.