ETV Bharat / state

சென்னை குற்றச்செய்திகள்: லிஃப்ட் மோதி முதியவர் உயிரிழப்பு; ஆபரேட்டர்கள் மீது வழக்குப் பதிவு.. - chennai news

Chennai Crime News: சென்னை மெரினா கடலின் அலையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு மற்றும் லிஃப்ட் மோதி முதியவர் உயிரிழப்பு உள்ளிட்ட குற்றச்செய்திகளை இங்கு காண்போம்.

Chennai Crime News on January 02 2024
சென்னை குற்றச்செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 8:09 PM IST

சென்னை: விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் வாழ்த்து..!

டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் புத்தாண்டு தினம் வரை சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் சாலை விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த பொது மக்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடலின் அலையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனராவ் இவரது மகன் சம்பிரித் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சம்ரித் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேருடன் புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, விவேகானந்தர் இல்லம் அருகில் கடற்கரையில் ஐந்து பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ராட்ச அலையில் சம்ரித், ராஜ் பரத், ஷாஹித் மூவரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதனால், அதிர்ச்சடைந்த அவர்களது சக நண்பர்கள் கூச்சலிட்டனர் இதனைக் கண்ட அங்கு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று கடல் அலையில் சிக்கிய மூவரில், ராஜ் பரத் மற்றும் ஷாகித் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கடல் அலைகள் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் சம்ரித்தின் உடல் தற்போது, விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. அதனை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லிஃப்ட் மோதி முதியவர் உயிரிழப்பு.. ஆபரேட்டர்கள் மீது வழக்குப் பதிவு..

சென்னை சேலையூரைச் சேர்ந்த எல்லப்பன் (76) இவர் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள மனவளக்கலை மன்றம் மற்றும் ஆன்மீக கல்வி மைய அறக்கட்டளைச் சார்பாக நேற்று (ஜன.01) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

எல்லப்பன் கீழ்த்தளத்தில் இருந்து இரண்டாம் தளத்திற்குச் செல்வதாக கீழே உள்ள கதவு வைத்த லிப்டை திறந்து பார்த்த போது, இயந்திர கோளாறு காரணமாக மேலிருந்து கீழே வந்த லிஃப்ட் எல்லப்பன் தலையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, எல்லப்பனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மயிலாப்பூர் போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், மயிலாப்பூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் லிஃப்ட் ஆபரேட்டர்கள் கிஷோர் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!

கடந்த 29ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு இடையே ரயிலில் தொங்கியபடி தீபக் மற்றும் குரு ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களும் பயணித்துள்ளனர். அப்போது, இருவரும் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளனர்.

இதனால், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தீபக் என்கிற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: ஜப்பானில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.