சென்னை: வியாசர்பாடி காந்திபுரத்தில் உள்ள திடீர்நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி இரவு, தன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசனுக்கும், குப்புசாமிக்கும் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து குப்புசாமியை குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் வியாசர்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சன பதிவு - அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!