சென்னை மாநகரை அழகுப்படுத்தும்விதத்தில் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் மூலம் சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை அழகுப்படுத்திவருகிறது.
குறிப்பாக பூங்காக்கள் அமைப்பது, சுவரொட்டிகளை அகற்றி படங்கள் வரைவது, பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவது எனப் பல்வேறு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுவருகிறது.
அழகுக்கு மேல் அழகு!
அந்த வகையில் சென்னையின் மிக முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மெரினாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்வதால், மெரினா கடற்கரையை அழகுப்படுத்த மாநகராட்சி தனி கவனம் செலுத்திவருகிறது.
அதாவது மெரினாவில் பூங்காக்கள் அமைப்பது, இரும்புப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்ட சுறா, நண்டு, இறால் சிற்பங்களை ஆங்காங்கே நிறுவுவது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் மெரினாவை மேலும் அழகூட்டும்விதமாக காந்தி சிலையின் பின்புறம் செயல்படாமலிருந்த நீரூற்றைப் புதுப்பித்து, வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 26 இரவு முதல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள், நீரூற்று முன்பாக நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: மரக்காணம் கலவரம்: பாமக தரப்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் அதிரடி