சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த காய்ச்சல் பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக களப் பணியாளர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்.
கரோனா தொற்று பாதிப்பை எந்த நாட்டு அரசாலும் முழுவதும் போக்க முடியாது. முடிந்த அளவு நோயை கட்டுப்படுத்தி வருகிறோம். சென்னையில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று தொற்று பாதித்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுகிறது" என்றார்.