சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் அகற்ற மாநகராட்சி தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறனர்.
அதன்படி நேற்று கோடம்பாக்கம் மண்டலம் 109ஆவது வார்டுமுதல் 129ஆவது வார்டுவரை பல்வேறு வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 28 ஆயிரத்தி 49 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திவந்த நிறுவனங்களுக்கு ஆறு லட்சத்து 44 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்து, 21 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல்செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இதேபோல் கோடம்பாக்கம் மண்டலம் 127ஆவது வார்டுமுதல் 142ஆவது வார்டுகள்வரை 40 ஆயிரத்து 392 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 10 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 61 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
தேனாம்பேட்டையிலும் மேற்கொண்ட சோதனைகளில் 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 82 டன் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல்செய்யப்பட்டதாக மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக கிளம்பியுள்ள பிகார்வாசி!