ETV Bharat / state

ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி - online competition on rain water awareness

பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

author img

By

Published : Aug 12, 2021, 11:07 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியின் https:chennaicorporation.gov.in/gee என்ற இணையதளத்தின் Quick Link தலைப்பின் கீழ் உள்ள இணைப்பின் வாயிலாக ஓவியப் பேட்டி, வாசகப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நாளை ஆக.13 முதல் ஆக.15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

போட்டிகள்

தலைப்பு: "தண்ணீரை வீணாக்க வேண்டாம்" - "Let No water Go Waste"

1. ஓவியப் போட்டி (Drawing Competition) 13 ஆகஸ்ட் 2021

2 வாசகப் போட்டி (Slogan Writing) 14 ஆகஸ்ட் 2021

3. கட்டுரைப் போட்டி (Essay Writing) 15ஆகஸ்ட் 2021

போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவியர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தின் வழியாக காலை 10 மணி முதல் மாலை 5 வரை தங்களது படைப்புகளை ஸ்கேன் அல்லது புகைப்படம் எடுத்து 1 MB அளவிற்கு மிகாமல் PDF, GIF வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மூன்று சிறந்த படைப்புகளுக்கு விருது

மாணவர்கள் தங்களது படைப்புகளில் பெயர், படிக்கும் வகுப்பு, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி ஆகிய விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் தவிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.