ETV Bharat / state

900 அரங்குகள், பல லட்சம் புத்தகங்கள்.. சென்னையில் களைக்கட்டும் புத்தகத் திருவிழா..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 9:38 PM IST

Updated : Jan 9, 2024, 11:09 PM IST

Chennai Book Fair: சென்னை புத்தகக் காட்சியில் குவிந்த ஏராளமானோர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிச் சென்று வருகின்றனர்.

Chennai Book Fair
சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

புத்தகக் கண்காட்சியின் சிறப்புகள்: மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். தென்னிந்தியப் புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை, பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பூம்புகார் சார்பில் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் பதிப்பகமும் பங்கேற்கிறது. நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள், சொற்பொழிவுகளை வெளியே இருக்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பெரிய ராட்சத எல்.இ.டி திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தகக் கண்காட்சி தொடர்பாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அபுதாபியில் இருந்து வருகை புரிந்த வாசகர் கூறுகையில், “பிரம்மாண்டமான இந்த புத்தகக் கண்காட்சியைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. இதனை முழுவதுமாக சுற்றிப் பார்க்க மூன்று நாள்கள் ஆகும், அவ்வளவு புத்தகங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மற்றொரு புத்தக வாசகர் எர்லின் என்பவர் கூறுகையில், “கடந்த 2 வருடங்களாகச் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று வருகின்றனர். இதன் மூலம் புத்தகத்தின் மீது தனி ஆர்வம் வரத்தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தென் கொரியாவில் நாய் கறிக்கு தடை! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

Last Updated : Jan 9, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.