சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பியூஷ் திவாரி (39). இவர் சென்னை நந்தனத்திலுள்ள அலுவலகத்தில் சுங்கவரித் துறை ஆய்வாளராகப் பணிப்புரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்று தனது நண்பருடன் தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மதுக்கடையில் மது அருந்தி விட்டு அங்குள்ள ஊழியர் கார்த்திக் என்பவரிடம் சிகரெட் கேட்டுள்ளார்.
அப்போது கார்த்திக் சிகரெட்டின் உரிய விலையை விட அதிகமாக விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கார்த்திக்கும் பியூஷிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு, அது இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து மது அருந்தி வந்த நபர்களில் சிலரும் பியூஷைத் தாக்கியுள்ளனர்.
பியூஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மதுபான கடை ஊழியர் கார்த்திக்கை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:-
முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - கோவை இளைஞர் அதிரடி கைது!