தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எழிலரசன், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கை கூடாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும், இதில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'உறுப்பினர் நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருக்கும்பட்சத்தில், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை அனுமதிப்பதில்லை என, அங்கே மாற்றம் கொண்டு வந்துள்ளனர். நாங்களும் ஆலோசித்து வருகிறோம்.
விரைவில் அமைச்சரவையில் முடிவு எடுத்து, அவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.