சென்னை, அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜிலான். இவர் தொழிற்கல்வி முடித்து செல்போன் பழுது செய்யும் கடையில், வேலை செய்து வருகிறார்.
ஜிலான் அதே பகுதியில் உள்ள ஒரகடம் சாலையில் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நேற்று இரவு (ஜூலை 8) நண்பர் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று விட்டு வரும்போது காதலியைப் பார்க்கும் ஆசையில் அவரது வீட்டிற்கு யாருக்கும் தெரியாதவாறு சென்றுள்ளார்.
அந்நேரம் பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வர, தப்பியோடிய ஜிலான், தவறி அருகே இருந்த 75 அடி கிணற்றில் விழுந்தார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவலளித்தார்.
அதனடிப்படையில் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கிணற்றில் படுகாயத்துடன் இருந்த ஜிலானை மீட்டனர். தற்போது அவர் அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!