சென்னை விமான நிலையத்தில் சவுதி அரேபியாவிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 37 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால், தினார் போன்ற வெளிநாட்டுப் பணம் இருப்பதையறிந்த அறிந்த அலுவலர்கள், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னை விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில், சுமார் 1 கோடி மதிப்பிலான உரிய ஆவணங்களின்றி கடத்தி கொண்டுவரப்பட்ட 3 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரேநாளில், சென்னை விமான நிலையத்தில் 37 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம், சுமார் 1 கோடி மதிப்பிலான 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.