சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்குச் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்று விட்டு இலங்கை வழியாக, இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.
இதையடுத்து அவரது உடைமைகளை முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவருடைய சூட்கேஸுல் லேப்டாப் சார்ஜர் 27 வைத்திருந்தார். சுங்கத்துறையினர் அந்த சார்ஜரை எடுத்துச் சோதித்த போது, ஃபிளக் பின்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 809 கிராம் தங்க ஃபிளக் பின்கள் இருந்ததும், அதன் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பயணியின் சூட்கேஸுக்குள், மேலும் 57 புதிய செல்போன்கள், 6 பழைய லேப்டாப்புகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். அவற்றையும் சுங்கத்துறையின் பறிமுதல் செய்தனர். அவைகளின் மதிப்பு சுமார் ரூ. 4.13 லட்சம் என்பது தெரியவந்தது. மொத்த பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: TN Rains: வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு!