சென்னை: சபரிமலையில் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் முதல் சென்னை எழும்பூர் வரை முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-
One-Way Unreserved Special train between #Chengannur - #ChennaiEgmore to clear extra rush during Makara Vilakku Festival.
— Southern Railway (@GMSRailway) January 16, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Passengers are requested to take note of this & plan your journey.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain #MakaraVilakku #TrainTravel pic.twitter.com/CheDaBYhhc
">One-Way Unreserved Special train between #Chengannur - #ChennaiEgmore to clear extra rush during Makara Vilakku Festival.
— Southern Railway (@GMSRailway) January 16, 2024
Passengers are requested to take note of this & plan your journey.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain #MakaraVilakku #TrainTravel pic.twitter.com/CheDaBYhhcOne-Way Unreserved Special train between #Chengannur - #ChennaiEgmore to clear extra rush during Makara Vilakku Festival.
— Southern Railway (@GMSRailway) January 16, 2024
Passengers are requested to take note of this & plan your journey.#SouthernRailway #FestivalSpecial #SpecialTrain #MakaraVilakku #TrainTravel pic.twitter.com/CheDaBYhhc
இதன்படி தென்னக ரயில்வே அறிவிப்பின்படி, கேரள மாநிலம் சபரிமலையில் நேற்று (ஜனவரி 15) மகர விளக்குப் பூஜை நடைபெற்றது. இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து பலயிரக்கணக்கில் பொது மக்கள் சபரிமலையில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனர். அவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கக் கேரள மாநிலம், ஆலப்புழா, செங்கனூர் - சென்னை எழும்பூர் இடையே ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண். 06089 செங்கனூர் - சென்னை எழும்பூர் ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு: செங்கனூர் - சென்னை எழும்பூர் ஒருவழியாக முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் செங்கனூரில் இருந்து ஜனவரி 16, 2024 அன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 07.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை மட்டும்) 10.45 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயிலில் 21- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 - மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமிறங்கும் காளைகள்.. திணறும் மாடுபிடி வீரர்கள்!