சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிசிதிஜ் ஜிண்ட்கர் (21). சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த இவர், மார்ச் 5ஆம் தேதி, சிந்தாரிபேட்டையை சேர்ந்த தனது நண்பரான அக்ஷய் (22) என்பவருடன், சான்றிதழ்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார்.
அவர்கள் கெங்குரெட்டி பாலம் அருகே வந்த போது, இருசக்கரவாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இருவர்,கல்லூரி மாணவர்களைத் தாக்கி, ஜிண்ட்கர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துவிட்டு அங்கியிருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஜிண்ட்கர் கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, கேட்டரிங் தொழிலாளி சுனில்(31), சலூன் கடைக்காரான ஈஸ்வர் (28) என்பது தெரியவந்தது. அவர்களை இருவரையும் கைது செய்து காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கைதான இருவரும் ஜிண்ட்கரின் நண்பரான அக்ஷயின் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அக்ஷயின் ஆலோசனை பேரிலேயே சுனில், ஈஸ்வர் ஆகியோர் இணைந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கெங்குரெட்டி பாலம் அருகே வரும் போது எங்களைத் தாக்கி விட்டு செயினை பறித்து செல்லுமாறு அக்ஷய் கூறியாதாக இருவரும் தெரிவித்தனர். மேலும், அந்த செயினை பெரம்பூரில் உள்ள அடகுகடையில், ரூ. 60 ஆயிரத்துக்கு அடகு வைத்து பணத்தை தாங்கள் மூவரும் பங்கு பிரித்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அக்ஷயையும் கைது செய்து, மூவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.