ETV Bharat / state

கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட CFOக்களுக்கு விருது! - Chennai news

கடந்த 2022ஆம் ஆண்டு கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தலைமை நிதி அதிகாரிகளுக்கு (CFO) இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் விருது வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட CFOக்களுக்கு விருது!

author img

By

Published : Feb 22, 2023, 12:30 PM IST

இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் மற்றும் உறுப்பினர் அளித்த பேட்டி

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட தலைமை நிதி அதிகாரிகளுக்கு (CFO) இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மொத்தம் 18 வகையான விருதுகள் 3 பிரிவுகளாக வழங்கப்பட்டன. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டல உறுப்பினரும், நடுவருமான விஜய் குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை சிறப்பாக கையாளும் தலைமை நிதி அதிகாரிக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

குறிப்பாக, கரோனா காலத்தில் நிறுவனங்கள் பல இன்னல்களை சந்தித்ததாகவும், அப்போது சிறப்பாக நிதி மேலாண்மையை கையாண்ட சிறந்த நபர்களுக்கு இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும், இந்த நிகழ்ச்சி 2ஆம் ஆண்டாக நடைபெறுகிறது எனத் தகவல் அளித்த அவர், விரைவில் வழங்குவதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதையும் கூறினார். அது, திறமையான நிதி மேலாண்மையை கௌரவிக்கும் வகையிலும், இதன் மூலம் பலரை ஊக்குவிப்பதற்காகவும் விரைவில் வழங்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன், இந்த தலைமை நிதி அதிகாரி விருது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்திய தொழில் துறையின் தென் பகுதி கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டதாக கூறினார். மேலும் இதை ஊக்கமாக நினைத்து இன்னும் இது போன்று சிறந்த நிதி மேலாண்மை அதிகாரியாக வரவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விருதுகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு இன்னும் 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் எனவும், அதை திறமையாகக் கையாள நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், முழு திறமையினையும் வெளிப்படுத்தி இதை வெல்ல வேண்டும் எனவும் உத்வேகத்தை அளிக்கும்படி பேசினார்.

இதையும் படிங்க: கழுத்தை நெரிக்கிறதா வீட்டுக்கடன்? தப்பிக்க என்ன வழி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.