ETV Bharat / state

மசாஜ் சென்டரில் கத்தியைக் காட்டி ஊழியர்களிடம் பணம், செல்போன் பறிப்பு! - cellphone and money robbery at massage parlour

சென்னை: மசாஜ் நிலையத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியைக் காட்டி ஊழியர்களிடம் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 26, 2021, 2:28 PM IST

சென்னை அண்ணா நகரில் டி.பிளாக் பகுதியில் ப்ளூ வேல்ஸ் என்கிற மசாஜ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் பார்லரின் மேனேஜராக சரத் என்பவரும், நிர்மலா,கார்த்திகா,அத்வான்,ஜீடு ஆகியோர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று(ஜன.25) வாடிக்கையாளர் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் நுழைந்துள்ளது. அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஊழியர்கள், வாடிக்கையாளரிடமிருந்து 7 செல்போன்கள், 33 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பியூட்டி பார்லரில் கடந்தாண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியைக் காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, அதே கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.