ETV Bharat / state

ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Feb 13, 2021, 3:25 PM IST

சென்னை: ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பிஷப் கார்டன் பகுதியில் வசிப்பவர் மருத்துவர் விஜய்(42). இவரது தந்தை வைகுந்த் ஓய்வுபெற்ற டிஜிபி ஆவார்.

விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு, அவருக்கு தெரிந்த பில்லா என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பு இறங்கிய பின்னர் ஆட்டோ ஓட்டுநர் பில்லாவுக்கும், விஜய்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விஜய், ஆட்டோ ஓட்டுநர் பில்லாவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பில்லா தனது நண்பர் கருப்பனை சம்பவ இடத்திற்கு வரவழைத்து விஜயை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விஜய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பீச்சில் பிறந்த மேனியாக ஓடிய மிலிந்த் சோமன் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.