சென்னையை அடுத்த மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் 2ஆவது குறுக்கு சாலையில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார். இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நேற்றிரவு (ஜன.27) எதிர் வீட்டு உரிமையாளரின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாதவரம் காவல் நிலையத்தில் நித்தியாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நித்தியா மீது மாதவரம் காவல் துறையினர், பிறர் சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல டான்ஸர் ரமேஷ் தற்கொலை - கொலையா? என போலீசார் விசாரணை