ETV Bharat / state

பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து! - சென்னை கலைவாணர் அரங்கம்

தொழில்முனைவோர், நெசவாளர்களின் கோரிக்கையான பஞ்சு மீதான 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

C M Stalin
C M Stalin
author img

By

Published : Sep 4, 2021, 1:56 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் திருத்தி வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் இன்று இந்து சமய அறநிலைத் துறை, தொழில் துறை, சுற்றுலாத் துறைக்கான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மு.க. ஸ்டாலின் பேசியபோது, "தமிழ்நாடு அரசு, நெசவாளர், தொழில்முனைவோர், சிறு, குறு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. இந்திய நாட்டில் துணி சந்தையிடுதலில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் 1,570 நூற்பாலைகள் உள்ளன.

இதில் 45 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் 95 விழுக்காடு பஞ்சானது வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 1987ஆம் ஆண்டு சட்டத்தின் 24ஆவது பிரிவின்படி பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சுக்கு ஒரு விழுக்காடு, சந்தையில் நுழைவு வரி வசூல் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி சிறு, குறு தொழிலாளர்களுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. நெசவாளர், தொழில்முனைவோர் இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்து அதனை ரத்துசெய்ய கோரினர்.

அதன் அடிப்படையில் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படுகிறது. இதன்மூலம் தொழில்முனைவோர், நெசவாளர்கள் பயனடைவார்கள். இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இதற்கான திருத்தம் கொண்டுவரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.