சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் அறிக்கையில், "பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டில் வசிக்கும் பௌத்தர்களுக்கான தலைமை மத அமைப்பாக மேற்படி அமைப்பு வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர்பிக்கு தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் அதிகாரப்பூர்மான பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. இதை அமைத்து ஊடகத்தினரும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அண்மையில் தம்மா என்கின்ற பெயரில் ஒரு படம் வந்திருப்பதை பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் புத்தரின் தலைமீது ஒரு குழந்தை ஏறி நின்று கொண்டு புத்தர் ஒரு கடவுள் அல்ல அவர் மனிதர் தானே என்பதைப் போல வசனம் வருகிறது. புத்தரி கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவரது தலை மீது ஏறி நின்று சொல்வதைப் போல வக்கிரத்தை இந்த உலகம் இதுவரை கண்டிருக்காது.
பௌத்தம் வலுவாக உள்ள நாடுகளில் இது போன்ற காட்சி வெளியே வந்திருக்குமானால் அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் சிறுபான்மை பௌத்த மதத்தினருக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற புரிதல் குறைவான புத்தரை அவமதிக்கும் வீடியோக்கள் வருகின்றன.
உலகின் குருவான ஆயிர நாமத்தாழியன் புத்தரை பண்டிதன் அயோத்திதாசர், பேராசிரியர் லட்சுமி நரசு பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வந்து இந்தியர்களுக்கு காட்டியுள்ளனர். அவர்களின் வழியில் புத்த மதத்தினை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு வாழும் பௌத்தர்களுக்கு வழிகாட்டியாக - ததாகதராகவும் மற்ற நாடுகளில் பகவன் புத்தரை கடவுளாகவும் வழிபடுகின்றனர்.
உலக நிலைமை இப்படியிருக்க, புத்தர் தலை மீது ஏறி நின்று அவரை அவமதிக்கும் காட்சி வெளியாகி ஊடங்களில் அதை வெளியிட்டுள்ளதுது. இக்காட்சி பொது வெளியில் பாயன் புத்தரின் மீது உருவாக்கும் பார்வையினால் தமிழகத்தின் பௌத்தர்கள் மனம் வெகுவாக புண்பட்டுள்ளது. இந்த காட்சி உலக நாடுகளுக்கு போகுமானால் உலகில் உள்ள பௌத்தர்களின் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
தான் எடுக்கும் படங்களில் புத்தரை நல்லபடியாக காட்டிக் கொண்டிருந்த இயக்குநர். பா.ரஞ்சித்துக்கு திடீரென இப்படி ஒரு காட்சி வெளியிட தோன்றியது ஏன் என்பது கேள்வியாக இருந்தாலும், தம்மம் படத்தில் வெளிவந்திருக்கின்ற காட்சி எங்களைப் போன்ற பௌத்த மதத்தவர்களின் மனதை கடுமையாக புண்படுத்தி உள்ளது.
எனவே அந்த படத்தின் இயக்குனர் திரு பா.ரஞ்சித் அவர்கள் அந்த காட்சிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்த காட்சிகளுக்கு தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி எந்த மதத்தினரும் மனம் புண்படும்படியான இதுபோன்ற காட்சிகள் ஊடகங்களில் இனி வரவிடாமல் தடுப்பதற்கான வழிகாட்டு தெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதற்காக தமிழக அரசின் கவளத்திற்கு இதை கொண்டு செல்ல இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்காட்சிகளுக்கான விளக்கத்தை நாங்கள் கோரவில்லை, பௌத்தர்கள் மனம் புண்பட்டதற்கான வருத்தத்தை தெரிவித்து மேற்கண்ட காட்சிகளை உடனடியாக இணைய தளங்களில் அனைவரும் நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், அக்காட்சியினை யாரும் பகிரக்கூடாது எனவும் கேட்டுக் கொன்கிறோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சட்ட தடடிக்கைக்கு செல்வோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசே மதுவை விற்றுக்கொண்டு ‘போதைப்பொருளை ஒழிக்க’ வேண்டுகோள் வைப்பது நியாயமா? - சீமான்