இதுகுறித்து தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஷ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அதனை அனைத்து மாவட்ட ஆட்சியரும் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் ஆவணப் பதிவுகளுக்காக பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். பொதுமக்களின் சிரமங்களை மேற்கோள் காட்டி, பொதுமக்கள் தங்கள் இல்லத்திலிருந்து துணை பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல பத்திரப்பதிவு டோக்கன்களை இ-பாஸாகப் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக பதிவுத்துறையால் வழங்கப்பட்ட டோக்கனின் சான்றுகள், பயணத்தின்போது அவர்கள் வைத்திருக்கும் பதிவு சம்பந்தப்பட்ட முன்மொழியப்பட்ட ஆவணம் உள்ளிட்டவைகளை மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு இ-பாஸாக ஏற்றுக்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். .