ETV Bharat / state

'புயல் பற்றி பேச அழகிரிக்கு எந்தத் தகுதியும் இல்லை' - பேட்டி

சென்னை:  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு புயல் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில் தெரிவித்தார்.

BJP_TAMILISAI
author img

By

Published : May 4, 2019, 1:38 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் பரப்புரைக்காக செல்கிறேன். அதன்பின் நான்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள உள்ளேன். பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இது குறித்து ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக உள்ளது. 1975ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சுதந்திரத்தை தடுத்தவர்கள் தற்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் சூழல் உள்ளது. ஒரு கருத்து சொன்னதற்கு தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்ட சரித்திரம் தமிழ்நாட்டில் உள்ளது. கட்சிக்குள் கருத்து சொல்வதற்கு உரிமை இல்லாத சூழலில் நாம் தற்போது சுதந்திரமாக உள்ளோம் என்றார்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நிச்சயமாக மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு அனைத்து அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என பதிலளித்தார். மேலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். கடந்த முறையை விட இந்த முறை அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த முறை அனைத்து குறைகளும் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

வராத புயலுக்கு முன்கூட்டியே நிதியுதவி அளிக்கையில், கஜா புயலுக்கு பிரதமர் வரவில்லை. அரசியல் நோக்கத்திற்காகத்தான் இதை செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்ததற்கு தங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,

விமான நிலையத்தில் தமிழிசை பேட்டி

கடலூரில் புயல் வந்தபோது கே.எஸ்.அழகிரி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் எங்கே சென்றனர். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங் வந்தாரா? காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு புயல் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்த நிவாரண உதவிகள் குறித்து பட்டியலிட முடியுமா? ஆனால், மோடி புயல் பாதித்த முதல் நாளே ட்விட்டரில் தனது பதிவை பதிவு செய்தார் எனக் குறிப்பிட்டார்.

Intro:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

டெல்லியில் பிரசாரத்திற்காக செல்கிறேன் அதன் பின் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் பாஜக அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் சூழல் உள்ளது எனவும் இது குறித்து ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்

பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக உள்ளது எனவும் 1975 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சுதந்திரத்தை தடுத்தவர்கள் தற்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் சூழல் தற்போது உள்ளது மேலும் ஒரு கருத்து சொன்னதற்கு தினகரன் அலுவலகம் கொடுத்த பட்ட சரித்திரம் தமிழகத்தில் உள்ளது கட்சிக்குள் கருத்து சொல்வதற்கு உரிமை இல்லாத சூழலில் நாம் இருந்து தற்போது சுதந்திரமாக உள்ளோம்

அரசியலைத் தாண்டி தூத்துக்குடியில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கூறினார்

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது குறித்த கேள்விக்கு நிச்சயமாக மாநில உரிமை பாதுகாக்கப்பட்டது தமிழர்களுக்கு அனைத்து அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்

தமிழ்நாட்டில் நீட் எழுதும் மாணவர்கள் தமிழகத்தில் தான் எழுதுவார்கள் எனவும் கடந்த முறை அதிகமானவர்கள் எழுதியதால் தான் வெளிமாநிலங்களில் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியது என்றார் மேலும் கடந்த முறையை விட இந்த முறை அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் அடுத்த முறை அனைத்து குறைகளும் சரி செய்யப்படும் எனவும் கூறினார்

கடலூரில் புயல் வந்தபோது அழகிரி, பா. சிதம்பரம் உள்ளிட்டோர் எங்கே சென்றனர் எனவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங் வந்தார் என கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு புயல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை எனவும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது செய்த நிவாரண உதவிகள் குறித்து பட்டியலிட முடியுமா என்றார் ஆனால் மோடி புயல் பாதித்த முதல் நாளே டுவிட்டரில் தனது பதிவை பதிவு செய்தார் எனக் கூறினார்

Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.