ETV Bharat / state

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை உள்பட பாஜகவினர் கைது - காயத்ரி ரகுராம்

திமுக நிர்வாகி அவதூறாக பேசியதைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Annamalai arrest  bjp protest  protest without permission  Annamalai arrested  chennai news  chennai latest news  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்  அண்ணாமலை  பாஜகவினர் கைது  அண்ணாமலை கைது  சைதை சாதிக்  குஷ்பு  நமீதா  காயத்ரி ரகுராம்  பாஜக மகளிர் அணி
அண்ணாமலை கைது
author img

By

Published : Nov 1, 2022, 6:18 PM IST

சென்னை: திமுக மாநிலப் பேச்சாளர் சைதை சாதிக், சமீபத்தில் பாஜக-வில் இருக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததைக்கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்யவில்லை என பாஜக மகளிர் அணியைச்சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையிடம் அனுமதி பெறாததால், அண்ணாமலை உட்பட ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக்கண்டித்து பாஜகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பாஜக மாநில தொழில்நுட்பப்பிரிவுத்தலைவர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.