ETV Bharat / state

அமைச்சரவையில் மாற்றம்: எல்.முருகனுக்கு வாய்ப்பு? ஓபிஆருக்கு ஆப்பு? - அமைச்சரவையில் மாற்றம்

பாஜக தலைவர் எல். முருகனுக்கு விவசாயத் துறையில் ஒன்றிய இணை அமைச்சர் பதவி அளிக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற பாஜக தலைவர்கள் அப்பதவிக்கு போட்டியிட்டு வருவதால் அறிவிப்பு வெளியாக காலதாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

bjp-decision-to-give-bjp-l-murugan-to-be-union-minister
அமைச்சரவையில் மாற்றம்: எல்.முருகனுக்கு வாய்ப்பு? ஓபிஆருக்கு ஆப்பு?
author img

By

Published : Jun 23, 2021, 10:00 PM IST

சென்னை: கரோனா தடுப்பூசி குளறுபடி, சரியான நிர்வாகமின்மை போன்ற காரணங்களால் பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனைத் தணிக்கவும், அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டும் ஒன்றிய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

லோக் ஜனசக்தி விலாஸ் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், கர்நாடக பாஜக எம்பி சுரேஷ் அகாதி ஆகியோர் மரணம், கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேற்றம் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனை நிரப்பும் வகையில், புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. ராம் விலாஸ் பஸ்வானின் மகன், சிராக் பஸ்வான், அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் யாருக்கு அமைச்சர் பதவி?

பாஜக தலைவர் எல். முருகனுக்கு விவசாயத் துறை ஒன்றிய இணை அமைச்சர் பதவி அளிக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற பாஜக தலைவர்களும் பதவிக்கு போட்டியிட்டு வருவதால் அறிவிப்பு வெளியாக காலதாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தனது மகனை ஒன்றிய அமைச்சர் பதவியில் அமரவைக்க பல்வேறு காய்களை ஓபிஎஸ் நகர்த்தி வந்ததாக அரசியல் களத்தில் அவ்வப்போது பேச்சு அடிபட்டவண்ணம் இருந்தது. தற்போது வெளியாகிவரும் தகவல்களை பார்க்கையில் ஓபிஆருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.