ETV Bharat / state

பிக்பாஸ் ஜூலி காதல் விவகாரத்தில் திருப்பம் - விசாரணையில் அம்பலம்

பிக்பாஸ் புகழ் ஜூலி தன் காதலர் திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறி கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூலியே காதலை துண்டித்தது அம்பலம்
ஜூலியே காதலை துண்டித்தது அம்பலம்
author img

By

Published : Dec 5, 2021, 9:51 AM IST

சென்னை: பிக்பாஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா (26). இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், "அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ் (26) அண்ணா நகர் இரண்டாவது வளாகத்திலுள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றிவருகிறார்.

நாங்கள் நான்கு ஆண்டுகளாக மிக நெருக்கமாகக் காதலித்துவந்தோம். அவரும் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்தார். இதனால் மனிஷுக்கு இருசக்கர வாகனம், இரண்டு சவரனில் தங்கச் செயின், பிரிட்ஜ் என இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்தேன்.

ஆனால் மனிஷ் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதத்தைக் காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாகத் தெரிவித்து காதலை முறித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மனிஷ் தொடர்ந்து பணத்தைப் பெற தொல்லை கொடுத்துவருகிறார்.

இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், "கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

பின் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாகப் பழக, அதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு மனீஷ் உடனான காதலை ஜூலியே துண்டித்து அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலியை அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு, தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் அவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் மனீஷின் தொல்லையில் இருந்து விடுபட அவரை மிரட்டுவதற்காகவே ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்" என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் முன்னிலையில் திருப்பி அளித்தார்.

இதையடுத்து ஜூலியும், மனிஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காவல் துறையினர் அழித்தனர். பின்னர் ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காதலன் மீது கொடுத்த புகாரை ஜூலி வாபஸ் வாங்கினார்.

இதையும் படிங்க: ’சாலையில் நடக்கும் மோதல்களுக்கு கட்சி பொறுப்பாகாது'-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.