ETV Bharat / state

பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர இன்றும், நாளையும் புதிதாக விண்ணப்பிக்கலாம்!

BDS medical course: தமிழ்நாட்டில் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவம் படிப்பில் சேருவதற்கு அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

BDS medical course
பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர இன்றும், நாளையும் புதிதாக விண்ணப்பிக்கலாம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 9:13 AM IST

சென்னை: 2023-2024ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என மொத்தமாக 105 உள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14,600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8,316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,032 இடங்களும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் என 17 இடங்கள் காலியாக இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான 4ஆம் சுற்று ஸ்ட்ரே வேகன்சி (stray vacancy) கலந்தாய்வினை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு 18, 19 ஆகிய தேதிகளில் https://tnmedicalselection.net, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் புதியதாகவும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 வரையில் பெற்ற மாணவர்கள் தகுதி உள்ளவர்கள். அக்டோபர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை மாணவர்கள் பதிவு செய்யலாம். தற்காலிக ஒதுக்கீடு 27ஆம் தேதி வெளியிடப்பட்டு, 28ஆம் தேதி முதல் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொண்டு, 30ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"ஏன் எங்க ஊருல நிறுத்தல" - பட்டாகத்தியுடன் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்; பரபரப்பு சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.