ETV Bharat / state

மருத்துவமனையில் காணாமல் போன கர்ப்பிணி: துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீஸ் - கர்ப்பிணி பெண்ணை மீட்ட காவல்துறையினர்

மருத்துவமனையில் இருந்து காணாமல் போன கர்ப்பிணியை பத்து மணி நேரத்தில் ஆவடி காவல் துறையினர் மீட்டனர்.

v
v
author img

By

Published : Nov 10, 2021, 3:29 PM IST

Updated : Nov 10, 2021, 4:25 PM IST

சென்னை: அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ராஜலட்சுமி (30) என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் இரட்டைக் குழந்தையைக் கருவில் சுமப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜலட்சுமியின் பிரசவ தேதி நெருங்கி வருவதையடுத்து, அவர் மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 9) அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று ராஜலட்சுமி மருத்துவமனையிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமியன் கணவர் உதயகுமார் உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.

செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ராஜலட்சுமியை வேறுயாரேனும் கடத்தி சென்றனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும் தனிப்படை அமைத்து காவல் துறையினர் ராஜலட்சுமியை தேடிவந்தனர். அம்பத்தூரில் இருந்து செங்குன்றம், பொன்னேரி வரை ராஜலட்சுமியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

இதில் ராஜலட்சுமி பொன்னேரியில் உள்ள தனது தோழி வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு காவல் துறையினர் சென்று ராஜலட்சுமியை மீட்டனர்.

தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜலட்சுமி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ராஜலட்சுமியை சமாதானம் செய்து அவரது கணவர் உதயகுமாரிடம் சேர்த்து வைத்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - தலைமை காவலர் பணியிடை நீக்கம்

Last Updated : Nov 10, 2021, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.