ETV Bharat / state

போதையில் இளைஞர்கள் தகராறு -  சமாதானம் செய்ய முயன்றவருக்கு சரமாரி அடி - people fight in tasmac

ஆவடி அருகே பாரில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதான செய்ய முயன்றவரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக்கில் சண்டையிட்ட குடிகாரர்களை சமாதானம் செய்ய முயன்றவர் மீது தாக்குதல்

author img

By

Published : Jul 7, 2022, 2:41 PM IST

சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திலகர் தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று (ஜூலை 06) விற்பனை நேரம் முடிந்த நிலையில் இரவு வழக்கம்போல பணியாளர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். இதன் பின்னர் பாரில் மது விற்பனை நடைபெறுவதை அறிந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் வந்து மதுபானம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து மதுபானம் விற்றவர்கள் மதுபானம் இல்லை என கூறி அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த இரண்டு இளைஞர்கள் மதுபானம் விற்பனையில் ஈடுப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபானம் வாங்க வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர்களிடம் ‘ஏன் சண்டை போடுகிறீர்கள்’ என கேட்டு சமாதானம் செய்தார்.

தகறாரில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றவர் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை சரமாரியாக முகத்தில் தாக்கினார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது நண்பரும் வந்து அவரை தாக்கினார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாட்டுக்கறி புகைப்படத்திற்கு காவல்துறை போட்ட ட்வீட்; சர்ச்சையை தொடர்ந்து விளக்கம் - முழு விவரம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.