ETV Bharat / state

TN Weather Update: வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை - Rainfall in the adjoining hills of the southern and western continuum

வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தென் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி: தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை

author img

By

Published : Apr 28, 2022, 5:15 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிக்கையின்படி, “வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

30.04.2022 மற்றும் 01.05.2022 வரை தென் தமிழ்நாடு மற்றும் வட உள்தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.05.2022அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2022: வானிலையைத் துல்லியமாகக் கணிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.