சென்னை : சென்னை மாவட்டம் பம்மல் அடுத்த நாகல்கேணி பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக சஙகர் நகர் ஆய்வாளர் பர்க்த்துள்ளாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகல்கேணி ராணி அண்ணா தெருவில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலத்தினை பறிமுதல் செயதனர். மேலும் நடத்தபட்ட விசாரனையில் சங்கர் நகர் பகுதிகளில் ஏற்கனவே வழிபறி சம்பவத்தில் சிறைக்கு சென்ற பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் தொடரும் இரவு நேர திருட்டு: பொதுமக்கள் அச்சம்!