ETV Bharat / state

பெண்களுக்கு பாலின சமத்துவ உரிமை வழங்கப்பட்டுள்ளதா? - நீதிபதி இந்திரா பானர்ஜி

author img

By

Published : Feb 16, 2020, 4:28 PM IST

சென்னை : இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாலின சமத்துவ உரிமைகள், பெண்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

Are women entitled to gender equality Justice Indira Banerjee
பெண்களுக்கு பாலின சமத்துவ உரிமை வழங்கப்பட்டுள்ளதா? - நீதிபதி இந்திரா பானர்ஜி

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு நீதித்துறை பயிலகம் இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து, திறம்பட விசாரிப்பது குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்த உரையாற்றிய அவர், ‘அரசியல் சாசனம், பாலின சமத்துவத்தை வழங்கியுள்ள போதிலும், பெண்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வழக்குகளில் விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம், பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது.

தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை போல் அவசரப்படுத்தப்படும் நீதியும், புதைக்கப்படும் நீதிக்கு சமம். மேலும் நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். சாட்சிகளிடம் நடத்தப்படும் விசாரணைகளை முறைப்படுத்த வேண்டும்.

தடய அறிவியல் போன்ற நவீன உக்திகளை கையாள வேண்டும். நீதிமன்ற நடைமுறைகளை ஒழுங்குப்படுத்தி நீதியை விரைந்து வழங்க முடியும்’ என்றார்.

முன்னதாக பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றம் நடந்த 21 நாட்களில், அந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆந்திரப் பிரதேசத்தின் திஷா சட்டத்தை மேற்கோள் காட்டி, இது சாத்தியமாகுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

Are women entitled to gender equality Justice Indira Banerjee
உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
இந்த நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணைையை முடிக்க வேண்டும் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல கட்டங்களாக நீதிமன்றங்களை நாடுவதால் இந்த வழக்குகளில் தாமதம் ஏற்படுகிறது.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வழக்குகளை கையாளுவதில் வழக்கறிஞர்களுக்கும், புலன் விசாரணை அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டியது அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நன்றியுரை ஆற்றினார். கருத்தரங்கில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் ரூ. 49 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.