ETV Bharat / state

'மோசடி நபரை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கக்கூடாது': அறப்போர் இயக்கம் - அறப்போர் இயக்கம்

மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் தலைவரை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கக்கூடாது என அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Regulatory Commission appointment of Regulatory Commission arappor iyakkam request tn eb மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறப்போர் இயக்கம் மின் துறையிடம் அறப்போர் இயக்கம் வேண்டுகோள்
அறப்போர் இயக்கம்
author img

By

Published : Feb 6, 2022, 10:14 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நம் மின்சார கட்டணங்களை முடிவு செய்யும் ஆணையமாகவும் மின்சார வாரியத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் சட்டப்பிரச்சனைகளுக்கு வழக்கின்மூலம் தீர்வு கண்டறியும் ஆணையமாகவும் செயல்படுகிறது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், "இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒரு உரிமையியல் நீதிபதி அதிகாரங்களுடன் செயல்பட சட்ட அதிகாரங்கள் உண்டு. ஒரு தலைமை உறுப்பினரும் இரண்டு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை செய்வார்கள்.

கடந்த மாதம் தமிழ்நாடு அரசு ஜரார்ட் கிஷோர் என்னும் நபரை உறுப்பினராக நியமனம் செய்தார்கள். மின்சார சட்டம் 2003 பிரிவு 85(5) படி தேர்ந்தெடுக்கப்படும் நபர் நிதி ஆதாய அல்லது மற்ற முரண் இல்லாதவராகவும் ஆணைய நலனுக்கு முரண் இல்லாதவராகவும் (Conflict of Interest) இருக்க வேண்டும்.

மேலும் பிரிவு 84(1) படி கடந்த காலத்தில் நேர்மையுடன் இயங்கிய ஒருவராகவும் இருக்க வேண்டும்.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜரார்ட் கிஷோர் மின்சார வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்யும் இன்ட் பாரத் பவர் ஜென்காம் லிமிடெட் (Ind Bharat Power Gencom Ltd) மற்றும் இன்ட் பாரத் தெர்மல் பவர் லிமிடெட் மற்றும் அர்காய் எனர்ஜி (Ind Bharat Thermal Power Ltd and Arkay Energy) ராமேஸ்வரம் போன்ற இன்ட் பாரத் குழு நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சட்ட மற்றும் வணிக பிரிவின் தலைவராகப் பணி புரிந்தவர்.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்...

இந்த நிறுவனங்களின் 7 வழக்குகள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விசாரணையில் உள்ளது. கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் நம் மின்சார வாரியத்திடம் நஷ்ட ஈடு கேட்டு இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில் சில வழக்குகளில் ஜரார்ட் கிஷோர் தான் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். தற்பொழுது அந்த வழக்குகளுக்கு அவரே நீதிபதி.

மேலும் ஜனவரி 19ஆம் தேதி இந்த நிறுவனத்தில் ரூ. 128 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு விசாரணையின் பொழுது, தனக்கு இதில் முரண்பாடு உள்ளது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி 25அன்று நடந்த நிறுவனத்தின் வழக்குகளில் அவர் விசாரணை நடத்தி உள்ளார். இது மின்சார சட்டப்பிரிவு 85(5) இன் படி சட்ட விரோதம்.

ஜரார்டு கிஷோர் மற்றும் அவர் தலைவராக வேலை பார்த்த இன்ட் பாரத் நிறுவனங்கள் மோசடிக்கு பெயர் போனவை. மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் இன்ட் பாரத் நிறுவனங்கள் ரூ.1,212 கோடி நஷ்ட ஈடு கேட்டு மின்சார வாரியத்திற்கு எதிராக தாக்கல் செய்த 3 வழக்குகளில் ரூ. 12 கோடி முன்கட்டணம் கட்டுவதற்குப் பதில் வெறும் ரூ.10,000 கட்டி மோசடி செய்தார் ஜரார்டு கிஷோர் மற்றும் அவரது நிறுவனம்.

இதை அறப்போர் இயக்கம் 2019இல் வெளியே கொண்டு வந்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தது. ஒழுங்குமுறை ஆணையம் உடனே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது. ஆனால், இன்று வரை அந்த ரூ.12 கோடி வசூல் செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை இது பற்றி விசாரணை செய்து வருகிறது.

மேலும் சி.பி.ஐ இன்ட் பாரத் நிறுவனங்கள் மீது ரூ. 947 கோடி கடன் மோசடிக்காக, 2021இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒருவரை நேர்மையானவர் என்று தற்பொழுது தேர்வு செய்துள்ளது அபத்தம். இது மின்சார சட்டம் பிரிவு 84(1) ஐ மீறும் சட்ட விரோதச் செயல்.

மின்சார வாரியம் ஏற்கெனவே ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டினால் பெரும் கடனில் உள்ளது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சட்டரீதியான மக்கள் மற்றும் மின்சார வாரிய நலனில் செயல்படாமல் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டால், இது மேலும் மின்சார துறையை பாழுங்கிணற்றில் தள்ளும். இந்த நியமனத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: அவனியாபுரத்தில் முறைகேடாக வெட்டப்பட்ட 300 மரங்கள் - மழுப்பலாகப்பதிலளித்த அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.