ETV Bharat / state

'நீட்ல சீட் கிடைக்கலையா... கவலைய விடுங்க...' யோகா மற்றும் இயற்கை டாக்டருக்கு அப்ளை பண்ணுங்க! - homeopathy

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

yoga and naturopathy
யோகா மற்றும் இயற்கை மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் தொடக்கம்
author img

By

Published : Jul 30, 2023, 12:56 PM IST

சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 30) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின்கீழ் தமிழ்நாட்டில் அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவை தவிர 16 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இளநிலை இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன. 1660 இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படிப்பிற்கு நீட் தேர்வு மதிப்பெண் தேவையில்லை. மேலும், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக் காண விண்ணப்ப விநியோகம் ஜூலை 30 முதல் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 14 வரை மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்தப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம் எனக் கூறியுள்ளனர்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களோடு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலர் தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.