ETV Bharat / state

நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க செயலி அறிமுகம்! - நியாய விலைக் கடை

நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

நியாயவிலை கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க செயலி....!

author img

By

Published : Nov 3, 2022, 3:31 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில், அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத்திட்டக் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்த பின் செய்தியாளர்களைச்சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'இந்த செயலி மூலம் மாதம்தோறும் நியாவிலைகளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,12,534 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 2,16,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 75 விழுக்காடு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஓரளவு டெல்டா மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது.

ஒன்றிய அரசு டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்து, 22 விழுக்காடு ஈரப்பதத்தை உயர்த்தி தர தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் 17 விழுக்காட்டில் இருந்து 19 விழுக்காடு என்கிற அளவில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நாட்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசுக்கு நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் 98.3 விழுக்காடு பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும்.

அதேபோல், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் வரவேற்பைப்பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கிடங்குகளிலிருந்து அரிசி கடத்தலைத்தடுக்க 2,886 கேமராக்கள் பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதேபோல், பொருட்களைக்கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக, அரவை ஆலைகளுக்கு எடுத்துச்சென்ற பின்னர் அவை உணவு தானியக்கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் வகையில், டெண்டர் விடுவதற்காகப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ எனப்பேசினார்.

இதையும் படிங்க:கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.